உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மலைகளை முழுங்கும் போலி எம்-சாண்ட் ஆலைகளால் அதிர்ச்சி | Fake M sand plants | Tamilnadu hills | Risk

மலைகளை முழுங்கும் போலி எம்-சாண்ட் ஆலைகளால் அதிர்ச்சி | Fake M sand plants | Tamilnadu hills | Risk

போலி எம்-சாண்ட் ஆலைகளால் காணாமல் போகும் மலைகள்! காத்திருக்கும் பேராபத்து தமிழகத்தில் 440 எம்சாண்ட் நிறுவனங்கள் அரசின் அனுமதி பெற்று இயங்குகின்றன. இந்த நிறுவனங்களில் தயாரிக்கும் எம்-சாண்டை தான், கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என பொதுப்பணி துறை அறிவித்துள்ளது. இதற்கு மட்டுமே இந்திய தர நிர்ணய அமைப்பின் பி.ஐ.எஸ் சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த நிறுவனங்கள் தினசரி 2 லட்சம் டன் எம்-சாண்ட் தயாரித்து கட்டுமானப் பணிகளுக்கு வழங்குகின்றன. ஆனால், சந்தையில் தினமும் 4 லட்சம் டன் எம்-சாண்ட் வருகிறது. கருங்கல் ஜல்லி தயாரிக்கும் கிரஷர்களை ஒட்டி, அனுமதியின்றி போலி ஆலைகள் இயங்குகின்றன. அதன் மூலமே தரமில்லாத எம்-சாண்ட் புழக்கத்துக்கு வருவது, அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம், தனியார் நிலத்தில் உள்ள பாறைகளை வெட்டி எடுக்க, கனிமவள துறை தாராள அனுமதி அளிப்பதுதான் என கூறப்படுகிறது. அதை தவறாக பயன்படுத்தி, பாறைகள் அதிகளவில் வெட்டி எடுக்கப்படுவதால் மலைகள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆற்று மணல் குவாரிகள் மூடப்பட்ட நிலையில் எம்-சாண்ட் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. ஆனால் தங்களுக்கு கிடைப்பது தரமான எம்-சாண்ட் தானா என்பதை, எளிதில் அறிய முடியாத நிலை இருப்பதாக தமிழக மணல், எம்-சாண்ட் லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். போலி நிறுவனங்களால் அதிக அளவு தரமில்லாத எம்-சாண்ட் தயாரித்து கட்டுமான பணிகளுக்கு வழங்கப்படுகிறது. கனிமவளத் துறை அனுமதியை தவறாகப் பயன்படுத்தி, குவாரி உரிமையாளர்கள் பக்கத்தில் இருக்கும் மலைகளிலும் பாறைகளை அதிகளவு வெட்டி எடுக்கின்றனர். இதனால், மலைக்குன்றுகள் இருந்த இடங்கள் பெரிய பள்ளங்களாக மாறி வருகின்றன. இயற்கை வளமான மலைகளை பாதுகாக்க வேண்டும் என்றால், போலி நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

செப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை