ஸ்ரீநகர், கத்ரா ரயில் நிலையங்களில் திரண்ட பயணிகள் | First vande bharat express | Anji Khad Bridge
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டம் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான வளைவு ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து செனாப் நதியின் கிளை நதியான அன்ஜி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் கேபிள் ரயில் பாலத்தையும் திறந்து வைத்தார். இதன்மூலம் காஷ்மீரிலுள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதை திட்டம் நிறைவு பெறுகிறது. நீண்ட காலமாக நடந்து வந்த இந்த ரயில் திட்டத்தின் மூலம் ஜம்மு - ஸ்ரீநகர் இடையே பயண நேரம் வெகுவாக குறையும். தொடர்ந்துகத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரையிலான 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இது காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களுக்கு ஒரு பக்ரீத் பரிசாக மட்டும் இல்லாமல், காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரு வரலாற்று தருணமாகவும் அமைந்தது.