உயிர் தப்பிய விஸ்வாஸ்குமார் என்ன நடந்தது என விளக்கம்! Flight crash | Ahmadabad | Man survived
குஜராத்தின் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 10 பணிப்பெண்கள், 2 பைலட்டுகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்கு உள்ளானது. விமானத்தில் இந்தியர்கள் 169 பேர், பிரிட்டனை சேர்ந்த 53 பேர், போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த 7 பேர், கனடாவைச் சேர்ந்த ஒருவரும் பயணம் செய்தனர். விபத்தில் இதுவரை 204 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இறந்தார். 242 பேரில் யாருமே உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டது. ஆனால் 40 வயதான ஒரு ஆண் உயிர் தப்பிய அதிசயம் நடந்துள்ளது. அவர் பெயர் விஸ்வாஸ் குமார். பிரிட்டன் பிரஜையான அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து அவர் கூறியதாவது: