/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னையின் பெரிய பெரிய ஓட்டலுக்கு சப்ளையா? | Food Safety Department | Chennai Meat Seized
சென்னையின் பெரிய பெரிய ஓட்டலுக்கு சப்ளையா? | Food Safety Department | Chennai Meat Seized
தமிழகத்துக்கு வரும் ரயிலில் ஒரு வாரத்திற்கு முன்பு வெட்டப்பட்ட இறைச்சிகள் வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. சென்னை எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் அதிரடி சோதனை நடத்தினர். ஜெய்ப்பூரில் இருந்து மதுரை சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் கண்டெய்னர் கண்டெய்னராக ஆட்டு இறைச்சி சிக்கியது. மொத்தம் 40 பெட்டிகளில் 1.6 டன் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை ஓட்டல்களுக்கு இந்த இறைச்சிகள் சப்ளை செய்ய இருந்ததாக கூறப்படும் நிலையில் இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.
ஆக 20, 2024