30 ஆண்டு கூட்டணியை தொடர சாத்தியகூறு உள்ளதா | ford| dmk| mk stalin| ford motors
உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம், சென்னை அடுத்த மறைமலை நகரில் 1996ல் தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 2.50 லட்சம் கார் இன்ஜின்கள் தயார் செய்யப்பட்டன. 32 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. நஷ்டத்தை கருத்தில் கொண்டு, 2022ல் ஃபோர்டு நிறுவனம் உற்பத்தியை நிறுத்தியது. தமிழகம் மற்றும் குஜராத்தில் செயல்பட்ட 2 ஃபோர்டு ஆலைகளும் மூடப்பட்டன. குஜராத்தில் இருந்த உற்பத்தி ஆலை, டாடா நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் 360 ஏக்கரில் அமைந்துள்ள ஃபோர்டு ஆலை இன்னும் அந்த நிறுவனத்தின் வசமே உள்ளது. இங்கு எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் பரவியது. இச்சூழலில்தான், ஃபோர்டு நிறுவனத்துடன் ஸ்டாலின் பேச்சு நடத்தி உள்ளார்.