அன்மோலை நாடுகடத்தி வர முயற்சி: பிஷ்னோய் கேங்க் பின்னணி | gangster lawrence bishnoi | Anmol Bishnoi
தாதா லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி அன்மோல் அமெரிக்காவில் கைது! பாடகர், மாஜி மந்திரி கொலையில் தொடர்பு இந்தியாவில் உள்ள ஆபத்தான கேங்ஸ்டர்களில் ஒருவன் லாரன்ஸ் பிஷ்னோய். இந்த கும்பல், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் மிரட்டி கொலை மிரட்டல் பணம் பறித்தல், கொலை, கூலிப்படை உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த கும்பலின் தலைவனான் லாரன்ஸ் பிஷ்னோய் 2014ல் ராஜஸ்தான் போலீஸ் மீது துப்பாக்கிசூடு நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.இப்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான். லாரன்ஸ் கேங்கில் 700க்கு மேற்பட்டோர் உள்ளன. சிறையில் இருந்தபடியே, வெளியில் குற்றசெயல்களை அவன் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2022ல் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை செய்யப்பட்டபோதுதான் இந்த கேங்கிங் செயல்பாடுகள் பரவலாக தெரியவந்தது. பாடகர் கொலையில் லாரன்ஸின் தம்பி அன்மோல் பிஷ்னோய்க்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. ஜோத்பூர் சிறையில் இருந்த அவன், ஜாமினில் வெளியே வந்த பிறகு போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு தப்பி சென்றான். கடந்த ஏப்ரல் மாதம் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீடு மீது பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இது சல்மானை கொல்ல நடந்த முயற்சியாக பார்க்கப்படுகிறது.