பாகிஸ்தானை ஓட ஓட அடித்த இந்தியா-பரபரப்பான ஐநா india vs pakistan UN security council | op searchlight
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் சபை கூடியது. பெண்கள் பாதுகாப்பு பற்றி விவாதம் நடந்தது. அப்போது இந்தியா மீது அபாண்ட குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் சுமத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் தரப்பில் பேசிய அந்த நாட்டின் பிரதிநிதி சைமா சலீம், காஷ்மீரில் பல ஆண்டுகளாக பெண்கள் போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றனர். மீண்டும் மீண்டும் பாலியல் வன்முறைகளை தாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். பொய்களை கட்டவிழ்த்து விட்ட பாகிஸ்தானுக்கு, அதே சபையில் இந்தியா இந்தியா மரண அடி கொடுத்தது. ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி பர்வதனேனி ஹரிஸ் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தார். அவர் பேசியது: ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு எதிராக குறிப்பாக பாகிஸ்தான் விரும்பும் எங்கள் நாட்டின் ஜம்மு காஷ்மீருக்கு எதிராக மாயையான கருத்துகளை பாகிஸ்தான் சொல்லி வருவது துரதிஷ்டவசமானது. பெண்களின் சுதந்திரம், பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா முன்னோடியாக திகழ்கிறது. பெண்களுக்காக இந்தியா செய்த ஒவ்வொரு சாதனையும் கறை படியாதது. ஆனால் தனது சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு வீசும் ஒரு நாடு, ஒவ்வொரு முறையும் இந்த சபையை தவறாக வழிநடத்துவதையே நோக்கமாக வைத்துள்ளது. 1971ம் ஆண்டில் ஆபரேஷன் சர்ச்லைட் மூலம் இதே பாகிஸ்தான் தான் சொந்த நாட்டில் இனபடுகொலை நடத்தியது. 4 லட்சம் பெண்களை பாகிஸ்தான் ராணுவம் பாலியல் பலாத்காரம் செய்தது. பாகிஸ்தானின் ஒவ்வொரு செயலையும் இந்த உலகம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது என்று இந்திய பிரதிநிதி ஹரிஸ் பேசினார். சமீபத்தில், பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாகிஸ்தான் ராணுவம் சரமாரியாக குண்டு வீசியது. பயங்கரவாதிகளை கொல்கிறேன் என்ற பெயரில், சொந்த நாட்டின் குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 30 பேரை கொன்று குவித்தது. இதை தான் தனது பேச்சில் நம் இந்திய பிரதிநிதி சுட்டிக்காட்டினார். அதே போல் அவர் ஆபரேஷன் சர்ச்லைட் பற்றியும் பேசி இருந்தார். இது வங்கதேசம் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த போது, 1971ல் நடந்த உலகின் கொடிய ஆபரேஷன். பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் டிக்கா கான் என்பவன் தலைமையில் நடந்தது. வங்கமொழி பேசுவோருக்காக தனி நாடு கேட்டு போராடியவர்களை தேடி தேடி இனபடுகொலை செய்தது பாகிஸ்தான் ராணுவம்.