வெளிமார்க்கெட்டில் வாங்க அறிவுறுத்துவதாக நோயாளிகள் புகார்! Government Hospitals | Tamilnadu | TN He
தமிழக மருத்துவ சேவை கழகம் சார்பில், மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, அரசு ஆஸ்பிடல்களுக்கு வழங்கப்படுகின்றன. தேவைப்படும்போது வெளிச்சந்தையில் கொள்முதல் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பிரதான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பல்நோக்கு மருத்துவமனைகளில், இதயம், சிறுநீரகவியல் உள்ளிட்ட நோயாளிகளுக்கான செரிமான பிரச்னை, கொழுப்பு பாதிப்புகளுக்கான மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அட்டோர்வாஸ்டாடின், நோடோசிஸ், டாம்சுலோசின் உள்ளிட்ட மாத்திரை, டாக்டர்கள் பரிந்துரை செய்தாலும், அரசு மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை. வெளி மருந்தகங்களில் வாங்கி கொள்ள, மருந்தாளுனர்கள் நோயாளிகளை அறிவுறுத்துகின்றனர். இதுகுறித்து நோயாளிகள் கூறியதாவது: சென்னையில் உள்ள அனைத்து பிரதான அரசு மருத்துவமனைகளிலும், சில வகை மருந்துகளுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது.