உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளியில் மனித மிருகம் | Govt School | POCSO

கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளியில் மனித மிருகம் | Govt School | POCSO

கிருஷ்ணகிரி, ஓசூர் அருகே உள்ள அரசு பள்ளியில் 10 வயதான சிறுமி 5ம் வகுப்பு படிக்கிறார். ஜூலை 3ம் தேதி மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அவர் சோகமாக இருந்துள்ளார். மறுநாள் பள்ளிக்கு போக மாட்டேன் என தனது தாயிடம் கூறியுள்ளார். ஏன் என்று கேட்டதற்கு சிறுமி சொன்ன பதில் அதிர வைத்துள்ளது. மதியம் உணவு இடைவேளை விட்ட போது மாணவர்கள் சிறுநீர் கழிக்க போயிருந்தனர். அப்போது என்ன தனியாக அழைத்து சென்ற ஹெட்மாஸ்டர் மார்பில் கிள்ளினார். வலியில் சத்தம் போட்டேன். கத்த கூடாது என மூக்கில் குத்தியதில் காயம் உண்டானது. எனக்கு ஸ்கூல் போகவே பிடிக்கவில்லை என கூறி அழுதுள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். 57 வயதான ஹெட்மாஸ்டர் சாரதி கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் சிறுமியை சீண்டியது உறுதி செய்யப்பட்டது. போக்சோவில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

ஜூலை 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி