/ தினமலர் டிவி
/ பொது
/ திருமணத்தில் உறவினர்களுக்கு அதிர்ச்சியை தந்த மணமகன் Groom Suffers |heart attack on horse| dies durin
திருமணத்தில் உறவினர்களுக்கு அதிர்ச்சியை தந்த மணமகன் Groom Suffers |heart attack on horse| dies durin
மத்திய பிரதேசத்தின் ஷியோபூர்Sheopur மாவட்டத்தை சேர்ந்த 26 வயதான பிரதீப்புக்கு 2 நாள் முன்பு திருமணம் நடைபெற இருந்தது. மணமகனை குதிரையில் உட்கார வைத்து மண்டபம் வரை அமர்க்களத்துடன் அழைத்து வந்தனர். மணமேடைக்கு செல்ல இருந்த மாப்பிள்ளை பிரதீப், திடீரென நெஞ்சை பிடித்தபடி மயங்கினார். உடன் இருந்த உறவினர்கள் அவரை தாங்கி பிடித்தனர். அவரை எழுப்ப முயன்றனர். அசைவு இல்லை. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். ஊர்வலத்திற்கு முன்பு ஆடிப்பாடி மகிழ்ச்சியாக வந்த மணமகன், மணமேடை ஏறும் முன் பரிதாபமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
பிப் 16, 2025