உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 20,000 பக்க ஆவணங்கள் பென்டிரைவில் தாக்கல்! Gutka case | Ex Ministers | Special Court

20,000 பக்க ஆவணங்கள் பென்டிரைவில் தாக்கல்! Gutka case | Ex Ministers | Special Court

தமிழகத்தில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, குட்காவை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவகுமார் ஆகிய 6 பேர் மீது சிபிஐ ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ரமணா மற்றும் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், வணிகவரித்துறை அதிகாரிகள் குறிஞ்சிசெல்வன், கணேசன், சுகாதாரத்துறை அதிகாரிகள் லட்சுமி நாராயணன், ஓய்வு பெற்ற துணை கமிஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத், முன்னாள் கவுன்சிலர் பழனி உள்ளிட்ட 21 பேர் மீது கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ