உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரூ. 27 கோடி சொத்துக்கு அதிபதி தேர்தலில் போட்டி Hari nadar| Alankulam constituency

ரூ. 27 கோடி சொத்துக்கு அதிபதி தேர்தலில் போட்டி Hari nadar| Alankulam constituency

சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள ஹரி நாடார், ஆலங்குளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். திருநெல்வேலி மேல இலந்தை குளத்தை சேர்ந்தவர் ஹரி நாடார் வயது 45. இவர் மீது 24 குற்ற வழக்குகள் உள்ளன. இவர், பனங்காட்டு படை என்ற நாடார் அமைப்பின் நிர்வாகியாக இருந்தார். 2021 சட்டசபை தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு 37,727 ஓட்டுகள் பெற்றார். தற்போது ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ளார். இம்முறை சிறை அதிகாரி முன்னிலையில் உறுதிமொழி அளித்து, முகவர்கள் மூலம் ஆலங்குளத்தில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 26.76 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள், 12 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதில், 11 கிலோ 650 கிராம் தங்கம் நகைகள், 17.06 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளும் அடங்கும். 2021ம் ஆண்டில் ஒன்றரை கோடி ரூபாய் வரி செலுத்தியதாக குறிப்பிட்டுஉள்ளார். ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடாரும், ராக்கெட் ராஜாவும் போட்டியிடுவதால் திமுக மற்றும் அதிமுக ஓட்டுகளில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

ஏப் 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி