உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா கொண்டுவரப்படும் காலிஸ்தான் பயங்ரவாதி ஹர்பிரீத் சிங் Harpreet singh|terrorist| NIA

இந்தியா கொண்டுவரப்படும் காலிஸ்தான் பயங்ரவாதி ஹர்பிரீத் சிங் Harpreet singh|terrorist| NIA

பப்பர் கால்சா இன்டர்நேஷனல் (BKI) என்ற காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் ஹர்பிரீத் சிங். ஹாப்பி பாஸியா என்றும் அழைக்கப்படுகிறான். போலீஸ் நிலையங்கள், மத வழிபாட்டு தலங்கள் உள்பட பல்வேறு இடங்களில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக மட்டும் அவன் மீது பல வழக்குகள் உள்ளன. தீவிரவாத செயல்களுக்கு தேவையான பணத்தை திரட்ட, முக்கிய நபர்களை கடத்துவது அவனது வாடிக்கை. இதற்காக தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அவனை தேடி வருகிறது. ஹர்பிரீத் சிங்கை பிடிக்க உதவி செய்வோருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் என்.ஐ.ஏ ஜனவரியில் அறிவித்தது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சாக்ரமெண்டோ என்ற இடத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த குற்றச்சாட்டில், FBI என்ற புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் ஏப்ரலில் அவனை கைது செய்தனர். பாஸியாவை இந்தியாவுக்கு கொண்டுவர என்.ஐ.ஏ அதிகாரிகள் முயற்சி எடுத்து வந்தனர்.

ஜூலை 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை