பெற்றோர் கண் முன் நடந்த சோகம் | Heat waves | Boy fainted | Rani
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரி அடுத்த டி.சி குப்பத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சத்யா. மனைவி வெண்ணிலா, 14 வயது மகன் அர்ஷன், 12 வயது மகன் பரத் ஆகியோருடன் பக்கத்து கிராமமான நத்தம் பகுதியில் மலை மீது உள்ள குலதெய்வமான மூங்கில் வாழி அம்மன் கோயிலுக்கு சென்றார். நேர்த்திக்கடன் செலுத்த மலை அடிவாரத்தில் இருந்து நடைபயணமாக சென்றுள்ளனர். உச்சி வெயில் உக்கிரமாக இருந்த நிலையில், சத்யாவின் மூத்த மகன் அர்ஷன் திடீரென மயங்கி விழுந்தார்.
ஏப் 29, 2024