உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தீபாவளி நாளில் கனமழை ஊற்றப்போகும் ஊர்கள் இவை தான் | heavy rain alert for Tamil Nadu | Diwali 2024

தீபாவளி நாளில் கனமழை ஊற்றப்போகும் ஊர்கள் இவை தான் | heavy rain alert for Tamil Nadu | Diwali 2024

அடித்து ஊற்றப்போகும் கனமழை தமிழகத்துக்கு 7 நாள் எச்சரிக்கை! லிஸ்ட்டில் எந்தெந்த ஊர்? தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீண்டும் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன் அறிவிப்பில் கூறி இருப்பதாவது: மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய பகுதியில் இன்னொரு வழிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதையொட்டி தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்யும்.

அக் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ