12 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்! | Rain | Rain Alert | Weather News | IMD
தென்மேற்கு வங்கக்கடலின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் எதிரொலியாக ஞாயிறன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அடுத்த 2 நாட்களில் இது மேற்கு திசையில், தமிழக, இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரலாம் என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது. அதே போல் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதியிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உட்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும். நாளை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 10ம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 12,13 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.