சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவர் விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி | TNUSRB Chairman | Sunilkumar | Ca
போலீஸ் துறைக்கு தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யும் பணியை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் செய்கிறது. இந்த வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக அரசு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுனில்குமார், தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். தமிழ்நாடு காவல்துறையின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு டிஜிபியாக பணியாற்றியவர் 2021 மார்ச் 31ல் ஓய்வு பெற்றார். இவர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட், மத்திய, மாநில அரசுகள் மற்றும் சுனில்குமார் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 11க்கு ஒத்தி வைத்திருந்தது ஆனால் வழக்கு இன்று பட்டியிலப்படாத நிலையில் மனுதாரதர் தரப்பில், நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன் முறையிடப்பட்டது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டதா? என்பது குறித்து கேட்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்ட நீதிபதி, வழக்கை பட்டியலிடுவது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் என கூறினார். அதேநேரத்தில் வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.