உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெண் வீட்டார் லட்சங்களில் கொட்டியும் அடங்காத வெறி | HIV Inject Woman | Dowry Demand | UP

பெண் வீட்டார் லட்சங்களில் கொட்டியும் அடங்காத வெறி | HIV Inject Woman | Dowry Demand | UP

மருமகளுக்கு எச்ஐவி ஊசி போட்டு மாமியார் அரங்கேற்றிய கொடூரம் உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரை சேர்ந்த பெண்ணுக்கும், ஹரித்வாரை சேர்ந்த இளைஞருக்கும் 2023ல் திருமணம் நடந்துள்ளது. பெண் வீட்டார்கள் மாப்பிள்ளைக்கு, ஒரு கார், 15 லட்சம் ரூபாய் ரொக்கம், லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இதில் திருப்தியடையாத மாமியார் மற்றும் மணமகன் குடும்பத்தினர் சில நாட்களுக்கு பின் மாப்பிள்ளைக்கு ஒரு எஸ்யுவி காரும், கூடுதலாக 25 லட்சம் பணமும் கேட்டு கொடுமைபடுத்தியுள்ளனர். வரதட்சணை கொடுக்கப்படாத நிலையில் மணமகளை வீட்டை விட்டு வெளியே விரட்டியுள்ளனர். பின்பு ஹரித்வாரில் உள்ள கிராம பஞ்சாயத்தினரின் தலையீட்டால் அந்த பெண் மீண்டும் கணவர் வீட்டுக்கு வாழ அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை உடல் மற்றும் மன ரீதியாக மணமகனின் குடும்பம் கொடுமை செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எனது மகளை கொலை செய்வதற்காக அவளின் மாமியார் மற்றும் குடும்பத்தினர் மகளுக்கு எச்ஐவி தொற்றுள்ள ஊசியை செலுத்தியுள்ளனர். எனது மகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தோம். அதில் அவருக்கு எச்ஐவி தொற்று இருப்பது தெரியவந்தது என கண்ணீருடன் கூறினார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து உள்ளூர் கோர்ட்டை நாடியுள்ளார். கோர்ட் உத்தரவின் படி இப்போது மணமகன் அபிஷேக் என்ற சச்சின், அவரது பெற்றோர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வரதட்சணை கொடுமை, தாக்குதல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மருமகளுக்கு, அவரது மாமியாரே எச்ஐவி வைரஸ் ஊசியை செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை