இந்திய பணக்காரர்கள் பட்டியலில் திடுக்கிடும் மாற்றம் | Hurun India Rich List | Gautam Adani | Mukesh
₹11,000,000,000,000 அதானி சொத்து இவ்வளவா? அம்பானிக்கு நடந்த அதிர்ச்சி ஹூருன்(hurun) ஆராய்ச்சி நிறுவனம் இந்திய பணக்காரர்கள் பற்றிய ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு 5 நாட்களுக்கு ஒரு கோடீஸ்வரர் உருவாகி வருகின்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் 2024ல் கூடுதலாக 220 பேர் 1,000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் எண்ணக்கை 1539 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக 1,334 பேரின் ஒட்டுமொத்த சொத்து விகிதம் உயர்ந்துள்ளது. அதில் 272 பேர் புதிய பணக்காரர்களாக உருவெடுத்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. புது பணக்காரர்கள் உருவாக முக்கிய காரணம், ரியல் எஸ்டேட், தொழிற்சாலை உள்ளிட்ட தொழில் துறைகளின் வளர்ச்சியாகும். இதுதவிர 205 பேரின் சொத்துக்கள் வீழ்ச்சியடைந்த்உள்ளது.