உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கணவனை காப்பாற்ற உயிரைவிட்ட மனைவி: பரபரப்பு husband wife attacked with sword tirupathur police crime

கணவனை காப்பாற்ற உயிரைவிட்ட மனைவி: பரபரப்பு husband wife attacked with sword tirupathur police crime

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மட்றப்பள்ளி ஊராட்சியின் துணை தலைவர் திருப்பதி (50). திமுகவை சேர்ந்தவர். இவரது மனைவி வசந்தி (46). கோ.புளியம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கணவன், மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அககம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்றனர். வசந்தி இறந்து கிடந்தார். ஊராட்சி துணைத்தலைவர் திருப்பதி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை போலீசார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட திருப்பதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனாலும் அவரது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது.

பிப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை