வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அனுதாபங்கள்
ஆம்னி பஸ்சில் தீ பற்றி துயர சம்பவம்! நடந்தது என்ன? | Hyderabad-Bengaluru Bus | Kurnool | Omni Bus Fi
ெலங்கானா ஹைதராபாத்தில் இருந்து நள்ளிரவு சொகுசு வால்வோ பஸ் ஒன்று பெங்களூரு நோக்கி கிளம்பியது. டிரைவர் உட்பட 40 பயணிகள் அதில் பயணித்தனர். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பஸ் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தேகூர் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பைக் பஸ் மீது மோதி உள்ளது. அந்த பைக் பஸ்சின் அடிப்பகுதியில் சிக்கி கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக பஸ் மீது தீப்பற்றி உள்ளது. நள்ளிரவில் தூக்கத்தில் இருந்த பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். பெட்ரோல் டேங்குக்கு தீ பரவி மளமளவென பஸ் முழுதும் பற்றி கொண்டதாக தெரிகிறது. ஏசி பஸ் என்பதால் அனைத்து கண்ணாடிகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பலர் எமர்ஜன்சி கண்ணாடியை உடைத்து வெளியே குதித்து உயிர் தப்பி உள்ளனர். 15 பேர் வரை காயத்துடன் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. உள்ளேயே சிக்கி கொண்ட 25 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்துள்ளனர். இவர்களது உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என அறிவித்துள்ளார். பஸ் முழுதும் எரிந்து கூடு மட்டுமே மிச்சமாகி உள்ளது. சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை கைப்பற்றினர். ஆரம்ப புள்ளி முதல் விபத்துக்கான முழு காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. #Hyderabad-BengaluruBus | #Kurnool | #OmniBusFire | #AndhraBus | #BusFire | #BusAccident
அனுதாபங்கள்