உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு! | ICC Champions Trophy 2025 | India | Pakistan | BCCI

பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு! | ICC Champions Trophy 2025 | India | Pakistan | BCCI

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த முறை பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. இதில் ஒருநாள் தரவரிசையில் டாப் 8 இடத்திலுள்ள அணிகள் மட்டும் பங்கேற்கும். 2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின் இந்திய அணி , பாகிஸ்தான் சென்றதில்லை. 2013ல் பாகிஸ்தான் மட்டும் இந்தியா வந்து டி-20 ஒருநாள் தொடரில் பங்கேற்றது. 2023 ஆசிய கோப்பை தொடருக்காகவும் இந்தியா, பாகிஸ்தான் செல்ல மறுத்தது. இந்தியா பங்கேற்ற போட்டிகள் இலங்கையில் நடந்தன. நான்கு ஆண்டுக்கு ஒருமுறை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது வழக்கம். 2017க்கு பின் 7 ஆண்டுகள் கழித்து ஐசிசி தொடரில் இரு அணிகளும் மோத உள்ளன. சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

நவ 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !