எதிர்பார்த்து காத்திருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்! | ICC Champions Trophy | Indian Cricket team
பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி! இந்தியாவின் நிலைப்பாடு என்ன? அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடர் நடக்கவுள்ளது. 50 ஓவர் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில், 8 அணிகள் பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி, குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19ல் நடக்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. 20ம் தேதி இந்தியா - வங்கதேசம், 23ல் இந்தியா - நியூசிலாந்து, மார்ச் 1ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் லாகூரில் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவில் சுமுகம் ஏற்படாததால், 2008ம் ஆண்டுக்கு பின் இதுவரை இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு விளையாட செல்லவில்லை.