இவ்ளோ பெரிய தொகை இதுவே முதல்முறை IIT| IIT madras| IIt donation
சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் டக்டர் கிருஷ்ணா சிவுகுலா, தாம் படித்த ஐஐடிக்கு 228 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளார். அகில இந்திய கல்வி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய நன்கொடை இது என கூறப்படுகிறது. மேலும் 54 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை ஐ.ஐ.டிக்கு கிடைத்த மிகபெரிய நன்கொடையும் இது தான். 1970ல் சென்னை ஐஐடியில் ஜெட் புரபல்சனில் முதுகலை பெற்றவர் கிருஷ்ணா சிவுகுலா. 1980ல் ஹார்வர்ட் பிசினஸ் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றார். அமெரிக்காவில் ஹாஃப்மேன் குழும நிறுவனங்களில் குழும தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர்.
ஆக 06, 2024