உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிரதமர் மோடி - இளையராஜா சந்திப்பில் பேசியது என்ன | Ilayaraja | Music director | PM Modi | symphony

பிரதமர் மோடி - இளையராஜா சந்திப்பில் பேசியது என்ன | Ilayaraja | Music director | PM Modi | symphony

இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 8ம் தேதி லண்டனில் வேலியன்ட் (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். ராயல் ஃபில்ஹார்மோனிக் இசை குழுவுடன் இணைந்து அரங்கேற்றப்பட்ட சிம்பொனி இசையை கேட்டு ரசிகர்கள் மெய் மறந்தனர். இதன்மூலம், முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்தார். தொடர்ந்து 13 நாடுகளில் சிம்பொனி இசையை அவர் அரங்கேற்ற உள்ளார். இந்தியாவிற்கே பெருமை பெற்றுத்தந்த இளையராஜாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தன. தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை பகிர்ந்து பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

மார் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை