உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகம் தப்பியது என வானிலை ஆய்வாளர்கள் கணிப்பு | IMD|Chennai IMD | low pressure area |Rain Update

தமிழகம் தப்பியது என வானிலை ஆய்வாளர்கள் கணிப்பு | IMD|Chennai IMD | low pressure area |Rain Update

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது; தெற்கு மியான்மர் கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் எதிரொலியாக மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மியான்மர் - வங்கதேச கடற்கரையை நோக்கி வடக்கு, வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளது. இது தவிர கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 7ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு 5ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

நவ 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி