உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா-பாக் போர் ஒத்திகை: அரபிக்கடலில் அதிர்ச்சி ind vs pak | ins vikrant | arabian sea | pahalgam

இந்தியா-பாக் போர் ஒத்திகை: அரபிக்கடலில் அதிர்ச்சி ind vs pak | ins vikrant | arabian sea | pahalgam

காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடிய தாக்குதலை தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் வெடித்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து இந்தியா தாக்கியது. ஆனால் பயங்கரவாத கும்பலுக்கு ஆதரவாக இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றதால் தான் இந்த போர் வெடித்தது. பாகிஸ்தானை நம் ராணுவம் பந்தாடியது. அடி தாங்க முடியாமல் 4 நாட்களில் சண்டையை நிறுத்தும்படி இந்தியாவிடம் கெஞ்சி போரை நிறுத்தியது பாகிஸ்தான். போர் நிறுத்தம் வந்த பிறகு 2 நாடுகள் இடையே படிப்படியாக பதற்றம் குறைந்து வந்தது. இதற்கிடையே பாகிஸ்தான் போரின் போது இந்தியா செய்த பல அதிரடி சம்பவங்களை இப்போது விமானப்படையும், ராணுவமும் முழுமையாக வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக, பாகிஸ்தானின் 5 போர் விமானங்களையும், வான் பாதுகாப்பு கவசமாக செயல்படும் 2 பிரமாண்ட கண்காணிப்பு விமானங்களையும், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய சில எப்-16 போர் விமானங்களையும் இந்தியா குண்டு வீசி அழித்த தகவலை சனிக்கிழமை விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் வெளியிட்டார். உடனே இதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்தது. அதன் பிறகு நம் ராணுவ தளபதியும் போர் பற்றி பல உண்மைகளை உடைத்தார். இதைத்தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் போர் பற்றிய விவாதம் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. இப்படியொரு பரபரப்பான சூழலில் தான் பதற்றத்தை ஏற்படுத்தும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தனித்தனியாக போர் ஒத்திகையில் ஈடுபட இருக்கின்றன. ஆகஸ்ட் 11 மற்றும் 12ம் தேதியில் அரபிக்கடலில் இந்தியா போர் ஒத்திகை செய்ய இருப்பதாக கடற்படை அதிகாரிகள் கூறினர். இதற்காக இந்தியாவின் போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் அந்த இடத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதே அரபிக்கடலின் பாகிஸ்தான் எல்லை பகுதிக்குள் அந்த நாடும், இதே நாட்களில் போர் ஒத்திகையில் ஈடுபட இருக்கிறதாம். இதற்காக குறிப்பிட்ட பகுதி வழியாக விமானம் பறக்கவும், போர் கப்பல்கள் செல்லவும் பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. பஹல்காம் தாக்குதல் நடந்த சில நாட்களில் இதே அரபிக்கடலில் இப்படியொரு பதற்றம் தொற்றி இருந்தது. எந்த கணமும் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் வெடிக்கும் அபாயம் இருந்த நேரம் அது. எல்லையில் இரு தரப்பு ராணுவமும் மாறி மாறி துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தன. அப்போது தான் இந்தியாவை மிரட்டும் வகையில் அரபிக்கடல் பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தப்போவதாக பாகிஸ்தான் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டது. பாகிஸ்தான் கொட்டத்தை அடக்க அதே அரபிக்கடலில் ஸ்கெட்ச் போட்டது இந்தியா. ஐஎன்எஸ் சூரத் போர் கப்பலை அரபிக்கடலில் களம் இறக்கியது. இஸ்ரேலுடன் சேர்ந்து தயாரித்த ஏவுகணையை சோதனை செய்தது. அடுத்ததாக விமானம் தாங்கி போர் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தையும் அதே அரபிக்கடலுக்கு கொண்டு வந்தது. இந்தியாவிடம் இருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த போர் கப்பல்களில் நம்பர் ஒன் இதுதான். ஐஎன்எஸ் கொல்கத்தா, ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் கிரிவாக் (krivak) ஆகிய 3 போர் கப்பல்களும் அடுத்தடுத்து அரபிக்கடல் வந்தன. இந்த கப்பல்களில் இருந்து நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை இந்தியா சோதனை செய்து பாகிஸ்தானை பதற வைத்தது. இந்தியா, பாகிஸ்தான் இடையே தீவிர போர் நடந்த போதும் முக்கிய போர் கப்பல்கள் அரபிக்கடலில் நிலை நிறுத்தப்பட்டு இருந்தன. அவை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை குறிவைத்து அடிக்க தயார் நிலையில் காத்திருந்தன. ஒருவேளை பாகிஸ்தான் போர் 4 நாட்களை தாண்டி நீடித்து இருந்தால், கராச்சி துறைமுகத்தை நம் கப்பல் படை அடித்து நொறுக்கி இருக்கும். ஆனால் அதற்குள் பாகிஸ்தான் அடிதாங்க முடியாமல் போரை நிறுத்தும்படி கெஞ்சி சண்டையை நிறுத்தி விட்டது. இப்போது அதே அரபிக்கடலில் மீண்டும் இருநாடுகளும் போர் ஒத்திகையில் ஈடுபட இருப்பது பதற்றத்தை எகிற வைத்துள்ளது.

ஆக 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !