உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரம்ப் டீமை பதற வைத்த ஷாங்காய் சம்பவம் ind vs us trade war | modi putin jinping meeting | sco vs us

டிரம்ப் டீமை பதற வைத்த ஷாங்காய் சம்பவம் ind vs us trade war | modi putin jinping meeting | sco vs us

அமெரிக்கா, இந்தியா இடையேயான வரி மற்றும் வர்த்தக மோதலுக்கு நடுவே சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு மொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்து விட்டது. குறிப்பாக அமெரிக்காவை பதைபதைக்க வைத்து இருக்கிறது. 10க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று இருந்தாலும், பிரதமர் மோடி, ஜின்பிங், புடின் ஆகியோர் தான் ஷாங்காய் மாநாட்டின் கதாநாயகர்களாக ஜொலித்தனர். மூன்று பேருக்கும் இடையே நடந்த கலகலப்பான சந்திப்பு, மோடி-ஜின்பின் பேச்சு வார்த்தை, மோடி-புடின் பேச்சு வார்த்தை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றன. அடாவடியாக 50 சதவீதம் வரி போட்டால் வர்த்தக விவகாரத்தில் இந்தியா தங்களிடம் சரண் அடைந்து விடும் என்று தப்பு கணக்கு போட்டு காத்திருந்த அமெரிக்காவுக்கு ஷாங்காய் மாநாடு அதிர்ச்சி வைத்தியம் அளித்து விட்டது. அமெரிக்காவுக்கு எந்த வகையிலும் அடிபணியாத இந்தியா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதையும் நிறுத்தவில்லை. மாறாக, ஷாங்காய் மாநாடு மூலம் இன்னும் இந்தியா-ரஷ்யா உறவு இன்னும் உறுதியாகி இருக்கிறது. இந்தியா-சீனா இடையேவும் வலுவான புதிய நட்புறவு ஏற்பட்டு இருக்கிறது. இதெல்லாம் நடக்க கூடாது என்று தான் பல ஆண்டுகளாக அமெரிக்க தலைவர்கள் போராடினர். சீனாவை கவுன்ட்டர் செய்ய இந்தியாவுடன் நெருங்கி நட்பு வைத்திருந்தனர். ஆனால் டிரம்ப் எல்லாவற்றையும் உடைத்து விட்டார். ஷாங்காய் மாநாட்டுக்கு பிறகு அவர் இன்னும் பதற்றமாக இருக்கிறார். இந்தியா மீது வரி போட்டது ஏன் என்பது தொடர்பாக பதற்றத்தில் வினோதமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். அமெரிக்கா மீது ஏற்கனவே இந்தியா விதித்த எல்லா வரியையும் நம் நாடு நீக்க தயாராக இருப்பது போல் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டார். இப்போது அவரது சகாக்களும் ஷாங்காய் மாநாடு பதற்றத்தை வெளிப்படையாக காட்டி வருகின்றனர். ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட், இந்தியா, ரஷ்யா, சீனாவை நடிகர்கள் என்று சாடினார். ஷாங்காய் மாநாடு குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில்: இந்த கூட்டம் ரொம்ப காலமாகவே நடந்து வருகிறது. இதை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்கிறார்கள். இது செயல்திறன் மிக்க அமைப்பு என்று நான் நினைக்கிறேன். இருப்பினும், இந்தியா உலகின் அதிக மக்கள் தொகையை கொண்ட நாடு. மிகப்பெரிய ஜனநாயக நாடு. அந்த அடிப்படையில் பார்த்தால் அவர்களுக்கு ரஷ்யாவை விட அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் தான் நெருக்கமான நாடுகள். ஆனால் இந்தியா, ரஷ்யா, சீனா மூன்றுமே மோசமான நடிகர்கள். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் இயந்திரத்துக்கு இந்தியா தான் தீனி போடுகிறது. சீனாவும் அதை தான் செய்கிறது என்று சாடினார். இது ஷாங்காய் மாநாடு காரணமாக அமெரிக்காவிடம் ஏற்பட்டு இருக்கும் பதற்றத்தை வெளிப்படையாக தோலுரித்து காட்டி விட்டது. இந்தியாவை இப்படி கடுமையாக சாடிய ஸ்காட், கடைசியில் ஐஸ் வைக்கவும் தவறவில்லை. இந்தியாவுக்கு அமெரிக்கா போட்ட வரி விதிப்பு, இரு நாடுகள் இடையேயான உறவு பற்றி அவர் கூறியது: வர்த்தக பேச்சு வார்த்தையில் இந்தியா வேகம் காட்டவில்லை. இது தான் டிரம்ப் வரி விதிப்புக்கு காரணம். இருப்பினும் இந்தியா, அமெரிக்கா இடையே வலுவான அடித்தளமிக்க உறவு இருக்கிறது. இரண்டுமே பெரிய ஜனநாயக நாடுகள். வேறுபாடுகளை எப்படி கையாள வேண்டும் என்று இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நன்கு தெரியும் என்று கூறினார். #USVsIndia #NarendraModi #VladimirPutin #XiJinping #EconomicConcerns #GlobalPolitics #InternationalRelations #Geopolitics #IndiaRussiaChina #Diplomacy #PoliticalAnalysis #ForeignPolicy #MeetingHighlights #EconomicOutlook #WorldLeaders #InternationalMeeting #ChinaIndiaRelations #UnityInDiversity #TreasurySecretary #ScottBessent

செப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ