உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரம்ப் முகத்திரை கிழித்த அமெரிக்க ரிப்போர்ட் ind vs us trade war | trump tariff | Jefferies | modi

டிரம்ப் முகத்திரை கிழித்த அமெரிக்க ரிப்போர்ட் ind vs us trade war | trump tariff | Jefferies | modi

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கு போட்ட அடாவடி வரி காரணமாக இரு நாடுகள் இடையே இருந்த வலுவான உறவு சிதைந்து விட்டது. வர்த்தக பற்றாக்குறை மற்றும் இந்தியா போடும் வரியை காரணம் காட்டி, நமக்கு 25 சதவீதம் பரஸ்பர வரி போட்டார் டிரம்ப். அடுத்த சில நாட்களிலேயே அபராதமாக மேலும் 25 சதவீதம் வரி விதித்தார். ரஷ்யாவிடம் நாம் கச்சா எண்ணெய் வாங்குவதால் தான் உக்ரைன் போரை நிறுத்த முடியவில்லை என்று சொல்லி, அடாவடியாக இந்த வரியை விதித்தார். இந்தியாவுக்கு எதிராக டிரம்ப் போட்ட 50 சதவீத வரியும் அமலுக்கு வந்து விட்டது. இது அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியை கடுமையாக பாதித்துள்ளது. என்ன தான் இந்தியாவுக்கு வரி போட்டதற்கு டிரம்ப் ஒரு காரணத்தை சொல்லி இருந்தாலும், உண்மை அதுவல்ல என்று பொருளாதார ஆய்வாளர்கள் ஒவ்வொருவரும் வேறு வேறு காரணத்தை சொல்லி வருகின்றனர். இப்படியொரு சூழலில் தான் அமெரிக்காவை சேர்ந்த ஜெஃப்பெரிஸ் Jefferies என்ற பிரபல நிதி நிறுவனம் புதிய காரணத்தை சொல்லி இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் போரில் டிரம்பை கோல் அடிக்க விடாமல் இந்தியா தடுத்ததே இதற்கு காரணம் என்று அந்த நிறுவனத்தின் அறிக்கை சொல்கிறது. அந்த அறிக்கையில் இருப்பதாவது: இந்தியா, பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக பகை இருக்கிறது. சமீபத்தில் தீவிரமாக நடந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று டிரம்ப் நினைத்தார். ஆனால் அதற்கு இந்தியா இடம் கொடுக்கவில்லை. இது டிரம்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரது தனிப்பட்ட கோபத்தின் காரணமாகவே இந்தியாவுக்கு 50 சதவீத வரி போட்டு இருக்கிறார் என்று ஜெஃப்பெரிஸ் அறிக்கை சொல்கிறது. இந்தியாவை பொறுத்தவரை காஷ்மீர் விவகாரத்தில் 3வது நாடு தலையிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. ஆனால் போர் நிறுத்தம் தன்னால் தான் வர வேண்டும் என்று நினைத்தார். ஆனால் இந்தியா அமெரிக்க தலையீட்டை அனுமதிக்கவில்லை. பாகிஸ்தான் ராணுவம் பேசியதால் போரை நிறுத்தியது. இருப்பினும் வர்த்தக ஒப்பந்தத்தை வைத்து மிரட்டி இரு நாடுகளையும் போரை நிறுத்த வைத்தேன் என்று மேடை தோறும் டிரம்ப் முழங்கி வருகிறார். ஆனால் அவரது போர் நிறுத்த உரிமை கோரலை திட்டவட்டமாக இந்தியா மறுத்து விட்டது. இது அவரது அமைதிக்கான நோபல் பரிசு பெறும் கனவில் இடியை இறக்கியது. இது தான் டிரம்பை ஆத்திரப்பட வைத்தது என்று அந்த அமெரிக்க அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. அதே போல் இன்னொரு தகவலும் அந்த அறிக்கையில் உள்ளது. இந்தியாவின் வேளாண் சந்தையை அமெரிக்கா பெரிய அளவில் குறி வைத்தது. தனது வேளாண் பொருட்கள், பால் பொருட்களை மிகப்பெரிய அளவில் இந்தியாவில் சந்தைப்படுத்த நினைத்தது. ஆனால் இது இந்தியாவின் 25 கோடி விவசாயிகளை நேரடியாக பாதிக்கும் அம்சம் என்பதால் இந்தியா ஒப்புக்கொள்ளவில்லை. இது டிரம்பை கோபப்படுத்தியது. இந்தியாவுக்கு 50 சதவீத வரி போட இதுவும் ஒரு காரணம் என்று அமெரிக்காவின் நிதி நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது. #Trump #Tariffs #JefferiesReport #PersonalPique #USTR #TradeRelations #IndiaTrade #50PercentTariff #AmericanEconomy #GlobalTrade #EconomicImpact #TradePartners #InternationalTrade #ImportTariffs #TradeDisputes #TariffDebate #USIndiaRelations #Economics #BusinessNews #TradePolicy

ஆக 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை