உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரம்ப் ரகசியம் உடைத்த பரபரப்பு ரிப்போர்ட் ind vs us trade war | us tarrif on india | trump vs modi

டிரம்ப் ரகசியம் உடைத்த பரபரப்பு ரிப்போர்ட் ind vs us trade war | us tarrif on india | trump vs modi

அமெரிக்காவில் இறங்கும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி போட்டு தீட்டி இருக்கிறார் அதிபர் டிரம்ப். இரு நாட்டு அதிகாரிகள் குழுவும் தீவிரமாக வர்த்தக பேச்சு வார்த்தை நடத்தி நிலையில், அடாவடித்தனமாக அடுத்தடுத்து 25 சதவீதம் வீதம் 50 சதவீதம் வரி போட்டு இந்தியாவுக்கு அதிர்ச்சி தந்தார். உக்ரைனுக்கு எதிராக தீவிர போரில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவுக்கு உதவுவது போல், அந்த நாட்டிடம் இருந்து இந்தியா பெரிய அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதால் தான் வரி போட்டதாக டிரம்ப் சொன்னார். என்ன தான் அவர் ரஷ்யாவை காரணம் காட்டினாலும், இந்தியா, அமெரிக்கா இடையே நிலவும் வர்த்தக பற்றாக்குறை டிரம்பை உறங்க விடவில்லை. அது தான் வரி விதிப்புக்கு காரணம் என்றனர். அதாவது, இரு நாடுகள் இடையே நடக்கும் வர்த்தகத்தில் அமெரிக்காவை விட நாம் பல படிகள் மேலே நிற்கிறோம். அவர்கள் நமக்கு செய்யும் ஏற்றுமதியை விட, நாம் அமெரிக்காவுக்கு செய்யும் ஏற்றுமதி ஒரு மடங்கு அதிகம். உதாரணத்துக்கு 2024ம் நிதி ஆண்டை எடுத்துக்கொள்வோம். நாம் அமெரிக்காவுக்கு 7.6 லட்சம் கோடி ரூபாய் பொருட்களை ஏற்றுமதி செய்தோம். ஆனால் அந்த ஆண்டில் அமெரிக்காவால் 3.6 லட்சம் கோடி பொருட்களை தான் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முடிந்தது. இந்த 4 லட்சம் கோடி ரூபாய் வரத்தக பற்றாக்குறை தான் டிரம்புக்கு கடுப்பை கிளப்பிய முக்கிய விஷயம் என்று பல பொருளாதார நிபுணர்கள் கூறினர். இந்த வர்த்த பற்றாக்குறையை சரி கட்டும் வகையில், அமெரிக்காவின் விவசாய சந்தையை இந்தியாவில் பெரிய அளவில் திறக்க டிரம்ப் முயற்சி செய்தார். மரபணு மாற்றிய காய்கறிகள், பழங்கள், பால் பொருட்களை இந்தியாவுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்ய விரும்பினார். டிரம்ப் ஆசையை நிறைவேற்றினால், இந்தியாவில் விவசாயம், பால் சார்ந்த தொழில் செய்யும் 80 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் அமெரிக்காவின் மரபணு மாற்றிய காய்கறிகள், பழங்கள், பால் பொருட்களுக்கு இந்தியா வரியை குறைக்க மறுத்து விட்டது. அந்த கோபத்தில் தான் சகட்டுமேனிக்கு வரி போட்டு தீட்டியதாக அந்த நிபுணர்கள் சொல்கின்றனர். இப்படி அமெரிக்கா, இந்தியா இடையே வர்த்தகப்போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், Bloomberg என்ற அமெரிக்காவை சேர்ந்த பொருளாதாரம் சார்ந்த ஊடகம் ஒன்று புலனாய்வு செய்து பல அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கு டிரம்ப் வரி போடுவதற்கு ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதெல்லாம் ஒரு காரணமே இல்லை. இந்தியா-அமெரிக்கா இடையே நீடிக்கும் வர்த்தக பற்றாக்குறையும் டிரம்புக்கு பெரிய பிரச்னை இல்லை. இதை எல்லாம் தாண்டி டிரம்பை சூடாக்கிய ஒரு நிகழ்வு தான், அவர் இந்தியா மீது 50 சதவீதம் அடாவடி வரி போட காரணமாகி விட்டது. அது தான் டிரம்ப்-மோடி இடையே நடந்த 35 நிமிட செல்போன் பேச்சு என்று அதிர வைத்துள்ளது அந்த புலனாய்வு ரிப்போர்ட். மோடி-டிரம்ப் செல்போன் உரையாடல் பற்றி வெளியே வராத பல தகவல்களையும், ஜி7 மாநாடு நடந்த போது டிரம்ப் செய்த எமகாதக வேலைகளையும் ப்ளூம்பெர்க்கின் புலனாய்வு ரிப்போர்ட் புட்டு பட்டு வைத்துள்ளது. இனி அந்த ரிப்போர்ட் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம். இந்தியா, பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் தீவிரமாக நடந்த போர் முடிந்திருந்த சமயம் அது. உலகின் பெரிய அணு ஆயுத நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதிய போரை நான் தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் சொன்னார். போகிற இடங்களில் எல்லாம் போரை நிறுத்தியது நான் தான் என்று உரிமை கொண்டாட ஆரம்பித்தார். இது இந்தியாவை கோபப்படுத்தியது. ஒரு கட்டத்தில் டில்லி பகிரங்கமாக எதிர்வினை ஆற்ற ஆரம்பித்தது. ‛இந்தியா ஒருபோதும் 3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை அனுமதிக்காது. பாகிஸ்தான் கெஞ்சி கேட்டதால் தான் போரை நிறுத்தினோம். நேரடியாக பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தியாவை தொடர்பு கொண்டனர். அதன் பிறகு தான் போரை நிறுத்தினோம். 3வது நாட்டுக்கு தொடர்பு இல்லை என்று இந்திய அதிகாரிகள் அறிவித்தனர். இதற்கிடையே ஜூன் மத்தியில் ஜி7 மாநாடு கனடாவில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக இந்திய பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்து இருந்தது. ஜி7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அந்த வகையில் அமெரிக்க அதிபர் டிரம்பும் கனடாவுக்கு வருகை தந்திருந்தார். அந்த நேரத்தில் தான் ஈரான், இஸ்ரேல் போர் தீவிரம் அடைந்து இருந்தது. இதனால் கனடாவில் இருந்து முன்கூட்டியே டிரம்ப் புறப்பட்டார். டிரம்ப் கிளம்பிய பிறகு தான் கனடாவுக்கு மோடி வந்து சேர்ந்திருந்தார். இதனால் இரு தலைவர்களும் சந்தித்து பேச முடியாமல் போனது. இந்த நிகழ்வுகள் எல்லாம் நடந்தது ஜூன் 17ம் தேதி. ஜூன் 18ல் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு மதிய விருந்து கொடுக்கும் எமகாதக திட்டம் ஒன்றை டிரம்ப் வைத்திருந்தார். இது பற்றிய தகவல் வெளியாகும் போதே இந்தியா அதிர்ச்சி அடைந்தது. இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை அனுப்பி போருக்கு வித்திட்டதே பாகிஸ்தான் தான். அப்படி இருக்க பாகிஸ்தான் ராணுவ தளபதியை எப்படி அமெரிக்கா விருந்துக்கு அழைக்கலாம் என்று இந்தியா ஆதங்கப்பட்டு கொண்டிருந்தது. இதெல்லாவற்றுக்கும் மேல் பக்கத்து நாடான கனடாவில் இருக்கும் பிரதமர் மோடியையும் அமெரிக்காவுக்கு கூப்பிட்டு, பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன் சேர்ந்து உரையாட வைக்க வேண்டும் என்று டிரம்ப் நினைத்தார். அப்படி 2 பேரும் சேர்ந்து பேசினால், ‛பாருங்கள், போரில் ஈடுபட்ட தலைவர்களை எவ்வளவு இணக்கமாக பேச வைத்து இருக்கிறேன். உண்மையில், நான் தான் இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று உலகை நம்ப வைக்க டிரம்ப் திட்டமிட்டார். ஆனால் டிரம்பின் எமகாதக திட்டத்தை டில்லி மோப்பம் பிடித்து விட்டது. இது பற்றி பிரதமர் மோடிக்கும் தகவல் சொல்லி, அவரை உஷார்படுத்தியது. டில்லி நினைத்தது போலவே நடந்தது. ஜூன் 17ல் அமெரிக்கா சென்றதுமே, கனடாவில் இருந்த பிரதமர் மோடிக்கு டிரம்ப் போன் செய்தார். ‛அவசரமா அமெரிக்கா திரும்ப வேண்டிய நிலைமை. அதான் சந்திக்க முடியல. பக்கத்துல தான இருக்கிங்க அப்படியே அமெரிக்காவுக்கு வாங்க. நாம பேசலாம் என்று மோடியை அழைத்தார் டிரம்ப். அவரின் எமகாதக திட்டத்தை ஏற்கனவே அறிந்து வைத்திருந்த பிரதமர் மோடி, ‛இல்லை... இல்லை... நான் குரேஷியாவுக்கு வருவதாக ஏற்கனவே உத்தரவாதம் கொடுத்து விட்டேன். கனடாவில் இருந்து நேரடியாக குரேஷியா போக வேண்டும். இன்னொரு முறை அமெரிக்கா வருகிறேன் என்று தட்டிக்கழித்தார் மோடி. இது டிரம்புக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் பேச்சை தொடர்ந்தார். பாகிஸ்தான் போர் பற்றி மோடியிடம் பேசினார். நான் தான் போரை நிறுத்தினேன் என்று குறிப்பிட்டார். உடனே மோடி ரியாக்ட் செய்தார். ‛நாங்கள் 3வது நாட்டின் மத்தியஸ்தத்தை ஒரு போதும் ஏற்பதில்லை. போரை நாங்கள் தான் நிறுத்தினோம். பாகிஸ்தான் நேரடியாக போரை நிறுத்தும் படி எங்களிடம் பேசியது. அதன் அடிப்படையிலேயே போரை நிறுத்தினோம் என்று மோடி அதிரடி காட்டினார். இது டிரம்ப் தலையில் இடியாய் இறங்கியது. அவர் நினைத்த எதுவும் நடக்கவில்லை. மோடியை பாகிஸ்தான் தளபதியுடன் பேச வைத்து தன்னை அமைதியின் தலைவனாக காட்டிக்கொள்ள முடியவில்லை. போரை டிரம்ப் தான் நிறுத்தினார் என்று பாகிஸ்தானை சொல்ல வைத்தது போல், அமெரிக்காவின் பங்கு இருப்பதாக இந்தியாவை சொல்ல வைக்க முடியவில்லை. இந்த இயலாமை டிரம்பை கோபத்தில் உச்சிக்கே கொண்டு சென்றது. அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி நாடான இந்தியாவை அன்று முதல் எதிரியாக பார்க்க ஆரம்பித்தார் டிரம்ப். என் நெருங்கிய நண்பர் என்று வார்த்தைக்கு வார்த்தை மோடியை பெருமை பேசும் டிரம்ப் மனநிலை மாறியது. எப்படியாவது இந்தியாவை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தார். அந்த நேரத்தில் வர்த்த பேச்சு வார்த்தை தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. எப்படியாவது இந்தியாவுக்கு சகட்டுமேனிக்கு வரி போட்டு விட வேண்டும் என்று முடிவு செய்தார். இதற்கு அவர் எடுத்த ஆயுதம் தான் ரஷ்யா. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி இந்தியாவுக்கு முதலில் 25 சதவீதமும், அடுத்து இன்னொரு 25 சதவீதமும் வரி போட்டார். இந்தியா மீது இறங்கிய இந்த வரிக்கு முழுக்க முழுக்க டிரம்பின் ஈகோ தான் காரணம் என்று ப்ளூம்பெர்க்கின் புலனாய்வு ரிப்போர்ட் சொல்கிறது. இன்னொரு முக்கியமான விஷயத்தையும் அந்த ரிப்போர்ட் சுட்டிக்காட்டி உள்ளது. அதாவது டிரம்ப் வரி விதிப்பதற்கு முன்பு 90 நாள் கெடு விதித்து இருந்தார். அந்த கால கட்டத்தில் வர்த்தக பற்றாக்குறையை போக்க அமெரிக்கா-இந்தியா இடையே தீவிர வர்த்தக பேச்சு வார்த்தை நடந்து வந்தது. ஒரு கட்டத்தில் இந்தியா சில சமரசங்களை செய்து கொண்டு ஒரு ஒப்பந்தத்துக்கு தயாரானது. இது தொடர்பாக ஒரு டீலையும் அமெரிக்காவுக்கு சமர்ப்பித்து இருந்தது. அந்த கோப்பு டிரம்ப் மேஜையில் தான் இருந்தது. எனவே 90 நாள் கெடு முடியும் நேரத்தில், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நல்லதொரு முடிவை டிரம்ப் அறிவிப்பார் என்று டில்லி எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால் அவர் அதிர்ச்சி அளிக்கும் விதமாக வரி போட்டு தீட்டினார். இது டில்லி சற்றும் எதிர்பார்க்காத விஷயம் என்று ப்ளூம்பெர்க் கூறி உள்ளது. வர்த்தக பற்றாக்குறை, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது அமெரிக்காவுக்கு ஒரு பிரச்னையாக இருந்தாலும் கூட, இவ்வளவு வரி விதிக்கும் அளவுக்கு பெரிய பிரச்னையாக அந்த நாடு கருதியதே இல்லை. ஆனால் பெரிய அண்ணன் மனப்பான்மையில் டிரம்ப் போட்ட வரி இந்தியாவுக்கு மட்டும் அல்ல; அமெரிக்கர்களுக்கே அதிர்ச்சியாக தான் இருக்கிறது. அங்குள்ள எதிர் கட்சிகளும், ஏன் டிரம்ப் கட்சியை சேர்ந்தவர்களுமே கூட இந்த அநியாய வரியை கடுமையாக கண்டித்து வருகின்றனர். ஆனால் டிரம்ப் எதையும் காது கொடுத்து கேட்பதாக இல்லை. முதல் முறை அதிபராக இருந்த போது, உலக தலைவர்களிலேயே தனது நெருங்கிய நண்பர் மோடி தான் என்று பெருமை பட மார்த்தட்டினார். 2வது முறை அதிபர் ஆன பிறகும் கூட இஸ்ரேல் அதிபருக்கு அடுத்து மோடியை தான் அவர் வெள்ளை மாளிகையில் சந்தித்தார். எனவே இந்தியா, அமெரிக்கா உறவு முந்தைய பைடன்

ஆக 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை