டில்லி கோட்டை சுற்றி வரலாறு காணாத பாதுகாப்பு Independence Day | Para Military Deployed in Red fort
நாட்டின் 79வது சுந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், நாடு முழுதும் பாதுகாப்பு பலப்பபடுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டில்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டை மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், டில்லி போலீஸ், எஸ்பிஜி, என்எஸ்ஜி, துணை ராணுவப்படை என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 20 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டை, பார்லிமென்ட், ஜனாதிபதி மாளிகை, மத்திய செயலகம், இந்தியா கேட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், அதிநவீன ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மனிதர்களின் அமைப்பை வைத்து அடையாளம் காணும் சிறப்பு கேமராக்கள், மக்களின் நடமாட்டத்தை எண்ணும் சிறப்பு கருவிகள், வாகனங்களின் நம்பர் பிளேட்களை அடையாளம் காணும் கருவிகள் என அதி நவீன கருவிகள் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. 800 கேமராக்கள் பொருத்தப்பட்டு, 2 கன்ட்ரோல் ரூம்கள் வாயிலாக 24 மணி நேரமும் கண்காணிப்ப பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி கொடி ஏற்றும் செங்கோட்டை பகுதியில் மட்டும் 486 சிசிடிவி கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறது. கோட்டையில் ட்ரோன் தடுப்பு சிஸ்டம் நிறுவப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமான ட்ரோன்கள் வந்தால் அது சுட்டு வீழ்த்தி விடும். சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 30 ஆயிரம் பேரின் விவரங்கள் ஆய்வு செய்து இருப்பதாக டில்லி போலீசார் கூறினர். எங்கேனும் சந்தேக பொருட்கள் கிடந்தால், உடனே கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவற்றை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.