சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலில் முன்னேறிய இந்தியா | India 3rd Most Powerful Nation in Asia
economic strength, youthful population ஆஸ்திரேலியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லோவி இன்ஸ்டிடியூட் என்ற ஆய்வு நிறுவனம் ஒரு ஆய்வை நடத்தியது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சக்தி வாய்ந்த நாடுகள் எவை என்ற ஆய்வை நடத்தியது. அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, சீனா, ஜப்பான் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 27 ஆசிய பசிபிக் நாடுகளின் செயல்பாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. சர்வதேச அரசியல் அரங்கில் உள்ள சவால்களை சமாளித்து முன்னேறும் திறனை வைத்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ராணுவத்தின் திறமை மற்றும் மற்ற நாடுகளிடம் உள்ள செல்வாக்கு ஆகியவற்றுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டது.