உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்லாமாபாத், லாகூரில் குண்டுமழை; திருப்பி அடிப்பதில் இந்தியா தீவிரம் | india attack lahore | Pak

இஸ்லாமாபாத், லாகூரில் குண்டுமழை; திருப்பி அடிப்பதில் இந்தியா தீவிரம் | india attack lahore | Pak

இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து குண்டு வீச்சு பாகிஸ்தானின் ட்ரோன் ஏவுகணைகள் துவம்சம் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவி வருகிறது. அவற்றை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில், ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஏவியது. அவற்றை இந்திய ராணுவம் எதிர்கொண்டு அழித்ததால், உயிரிழப்புகளோ, சேதங்களோ ஏற்படவில்லை என்று ராணுவம் தெரிவித்துள்ளது. நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தியா முழுமையாக தயாராக உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாபில் மற்றும் எல்லையோர மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளதால் அந்த மாநிலங்கள் இருளில் மூழ்கி உள்ளன. மருத்துவமனைகள், மத்திய சிறைகளுக்கு மட்டும் மின்சாரம் வழங்கப்படும். எல்லை பகுதிகளில் இருப்பவர்கள் உயர் எச்சரிக்கையுடன் இருக்கவும், வீட்டுக்குள்ளேயே இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சாலையோர மக்கள் பதுங்கு குழிக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். சண்டிகர், ஸ்ரீநகர், லூதியானா, பந்தர்,பாட்டியாலா, சிம்லா, ஜம்மு, லே உட்பட 24 ஏர்போர்ட்கள் மூடப்பட்டன. பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடியை தீவிரப்படுத்தி உள்ளது. லாகூர், இஸ்லாமாபாத், கராச்சியை குறிவைத்து ஆளில்லா விமனம் மற்றும் ஏவுகணைகள் மூலம் பலமுனை தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் இல்லத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மே 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை