அமெரிக்கா கண்ணில் மண்ணை தூவி சரித்திரம் படைத்த இந்தியா India GDP |Economic Growth| India Economy
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த தரவுகளை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டது. இதன்படி, ஜூலை-செப்டம்பர் இடையிலான காலாண்டில் இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி கண்டது தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கி இந்த காலாண்டிற்கு 7 சதவிகித வளர்ச்சி இருக்கும் என கணித்திருந்த நிலையில், அதனை விஞ்சி 8.2 சதவிகிதம் என்ற அளவில் அதிரடி வளர்ச்சி கண்டுள்ளது. இதன் மூலம், உலகிலேயே மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் என்ற தனது நிலையை இந்தியா உறுதி செய்துள்ளது. இது கடந்த ஆறு காலாண்டுகளில் இல்லாத அதிகபட்ச வளர்ச்சியாகும். இது ரிசர்வ் வங்கி மற்றும் பொருளாதார நிபுணர்கள் கணித்த எதிர்பார்ப்புகளை விஞ்சியுள்ளது. இந்த வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 8.2 சதவிகித ஜிடிபி வளர்ச்சி ஊக்கமளிக்கிறது. இது வளர்ச்சியை ஊக்குவிக்கும் இந்தியாவின் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது என தெரிவித்தார். உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள், அமெரிக்காவின் கடுமையான வரி கொள்கைகளுக்கு மத்தியில் இந்த சாதனை நடந்துள்ளது.