மோடி கொடி ஏற்றியதும் மலர் தூவிய ஹெலிகாப்டர்கள் india independence day | modi | mi-17 helicopters
நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். முன்னதாக அவரை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் சஞ்சய் சேத், பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் வரவேற்றனர். தியாகத்தின் சின்னமாக விளங்கும் காவி நிறத்தில் ஆன தலைபாகையுடன் பிரதமர் மோடி கம்பீரமாக வந்தார். முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மோடி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சுதந்திர தினத்தையொட்டி டில்லி கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றி வைப்பது இது 12வது முறையாகும். தேசிய கொடி ஏற்றப்பட்டதும் கோட்டைக்குள் ராணுவத்தின் எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் பறந்து வந்தன. தேசிய கொடிக்கு மலர் தூவி மரியாதை செய்தன. அரங்கத்தில் இருந்தவர்கள் மீதும் ஹெலிகாப்டர்கள் மலர் தூவின.