உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா பெயரை சொல்லி புடினிடம் கெஞ்சிய பாக் பிரதமர் | ind vs pak | india russia | modi putin video

இந்தியா பெயரை சொல்லி புடினிடம் கெஞ்சிய பாக் பிரதமர் | ind vs pak | india russia | modi putin video

சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு மொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது. நம் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் ஆகிய மூன்று பேர் தான் மாநாட்டின் கதாநாயகர்களாக திகழ்ந்தனர். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்பை மூன்று தலைவர்களுமே பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மாநாட்டு தீர்மானங்களும் இந்தியாவுக்கு சாதகமாகவும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் இருந்தன. எல்லா வகையிலும் பாகிஸ்தான் புறக்கணிக்கப்பட்டது. மாநாட்டில் பெரிதும் பேசப்பட்டது மோடி, புடின் நட்பு தான். எங்கு சென்றாலும் 2 பேரும் தான் ஒன்றாகவே இருந்தார்கள். குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வரும் போது கூட கைகளை இறுக பற்றிக்கொண்டு கலகலப்பாக பேசினார்கள். மோடி, புடின் சேர்ந்து சென்று ஜின்பிங்குடன் கலகலப்பாக பேசும் வீடியோவும் சர்வதேச அரசியல் களத்தில் பெரிதும் விவாதிக்கப்பட்டது. மாநாடு முடிந்த பிறகு இந்தியா, ரஷ்யா இடையேயான நல்லுறவு பேச்சு வார்த்தை ஓட்டலில் நடந்தது. எனது காரில் தான் வர வேண்டும் என்று 10 நிமிடம் காத்திருந்து மோடியை தனது பிரத்யேக காரில் புடின் அழைத்து சென்றார். இரு நாட்டு பேச்சு வார்த்தையும் ஒரு மணி நேரம் நடந்தது. அதற்கு முன்பு தனியாக காரில் மட்டும் மோடியும் புடினும் 45 நிமிடங்கள் பேசினார்கள். மாநாட்டின் துவக்கம் முதல் இறுதி வரை இந்தியா, ரஷ்யா நட்புறவு ஜொலித்தது. மிகவும் பழமையான இருநாடுகள் இடையேயான நட்பு, மோடி-புடின் வந்த பிறகு இன்னும் ஒரு படி மேலே போய்விட்டது. அமெரிக்காவின் அடாவடி வரிக்கு பிறகும் கூட இரு தலைவர்களும் இவ்வளவு நெருக்கமாக உறவாடியது டிரம்புக்கு வயிற்று எரிச்சலை உண்டு பண்ணியது. இன்னொரு பக்கம் பக்கத்திலேயே இருந்து பார்த்த பாகிஸ்தானுக்கு பொறாமை தாங்க முடியவில்லை. இது வெளிப்படையாகவே இப்போது தெரிந்து விட்டது. அதாவது, ஷாங்காய் மாநாடு முடிந்த பிறகும் சீனாவின் வெற்றி நாள் அணிவகுப்புக்காக புடினும் ஷெபாஸ் ஷெரீப்பும் அங்கேயே தங்கி இருந்தனர். இதன் ஒரு பகுதியாக இரு தலைவர்களும் சிறிது நேரம் சந்தித்து பேசினர். அப்போது தனக்கு நேரம் ஒதுக்கியதற்காக பாகிஸ்தான் பிரதமர் புடினுக்கு நன்றி சொன்னார். இந்தியாவை போல் தங்களிடமும் ரஷ்யா நெருக்கமாக இருக்க வேண்டும் என்று கெஞ்சினார். இது தொடர்பாக அவர் கூறியது: ரஷ்யா, பாகிஸ்தான் உறவு வளர்ந்து வருகிறது. குறிப்பாக வர்த்தக உறவு வளர்ந்து இருக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து நாங்கள் கூடுதலாக கச்சா எண்ணெய் வாங்க ஆரம்பித்து இருக்கிறோம். நம் உறவை இன்னும் வலுப்படுத்த நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். பாகிஸ்தானுக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு தருவதற்கும், பிராந்தியத்தில் சமநிலை வகிக்க முயற்சிப்பதையும் நாங்கள் வரவேற்கிறோம். நீங்கள் இந்தியாவுடன் வைத்திருக்கும் நல்லறவை நாங்கள் மதிக்கிறோம். அந்த உறவு சிறப்பானது. ஆனால் நாங்களும் ரஷ்யாவுடன் உறுதியான உறவை கட்டமைக்க விரும்புகிறோம். இது பிராந்தியத்தில் முன்னேற்றத்தையும் செழிப்பையும் நிச்சயம் கொண்டு வரும். நீங்கள் மிகவும் ஆற்றில் மிகுந்த தலைவர். உங்களுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று புடினிடம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறினார். #ModiPutiMeet #IndiaRussiaTalks #IndiaPakistan #Pakistan #RussiaTalks #PutinShehbazSharif #Diplomacy #Geopolitics #InternationalRelations #StrategicPartnership #SouthAsia #PakistanChina #BilateralTalks #NationalSecurity #ForeignPolicy #PeaceTalks #GlobalPolitics #LeadershipCluster

செப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி