இந்திய உறவு குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை! India USA Relationship | President Trump | PM Modi
இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு, இரு நாடுகளின் உறவில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இரு நாட்டு உறவு குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: மோடி ஒரு சிறந்த பிரதமர். அவருடன் நான் எப்பொழுதும் நண்பராக இருப்பேன். நான் மோடியுடன் நல்ல முறையில் பழகுகிறேன். சில மாதங்களுக்கு முன்பு கூட அமெரிக்கா வந்தார். நாங்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தோம். சில சமயம் அவர் செய்தது எனக்கு பிடிக்கவில்லை. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக எண்ணெய் வாங்கும் என நான் நினைக்கவில்லை. அதனால் பெரும் ஏமாற்றம் அடைந்தேன். அதனால் இந்தியாவுக்கு மிக அதிகப்படியான 50 சதவீத வரியை விதித்தோம். ஆனால் இந்தியா - அமெரிக்கா இடையே சிறந்த உறவு இருக்கிறது. அதை பற்றிக் கவலைப்பட ஒன்றுமில்லை என டிரம்ப் கூறி உள்ளார். #PresidentTrump #India #America #Relations #USIndiaRelations #TrumpInIndia #BilateralRelations #GlobalPolitics #TradeAgreements #Diplomacy #InternationalRelations #TrumpAdministration #IndiaAmericaAlliance #Geopolitics #CulturalExchange #EconomicGrowth #ForeignPolicy #StrategicPartnership #VisitIndianLeaders #POTUS