/ தினமலர் டிவி
/ பொது
/ இந்தியாவுடன் போருக்கு வரும் வங்கதேசம்-பகீர் பின்னணி | india vs bangladesh | muhammad yunus vs india
இந்தியாவுடன் போருக்கு வரும் வங்கதேசம்-பகீர் பின்னணி | india vs bangladesh | muhammad yunus vs india
வங்கதேசத்தில் வெடித்த உள் நாட்டு கலவரத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு, அடைக்கலம் கோரி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். புதிய அரசு அமையும் வரை நாட்டை நிர்வகிக்கும் இடைக்கால தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார். அவர் பதவி ஏற்றது முதல் வங்கதேச அரசு நிர்வாகம் தறிகெட்டு ஓடுகிறது. வங்கதேசத்தில் அமைதி இல்லை. இந்துக்களும் இதர சிறுபான்மை மக்களும் கொடூரமான முறையில் தாக்கப்படுகின்றனர். இந்து கோயில்களை இடிப்பதும், இந்து மத தலைவர்களை கைது செய்வதும் தொடர் கதையாகி விட்டது. இன்னொரு பக்கம் சேக் ஹசீனா இந்தியாவில் இருப்பது முகமது யூனுசுக்கு பிடிக்கவில்லை.
ஜன 07, 2025