பாகிஸ்தான் தாக்கும்போது கிரிக்கெட் ரசிகர்கள் சம்பவம் india vs pakistan | dharamshala stadium | IPL
காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களை குறி வைத்து நேற்று பாகிஸ்தான் திடீர் தாக்குதல் நடத்தியது. கச்சிதமாக செயல்பட்ட நம் ராணுவம், பாகிஸ்தான் அனுப்பிய போர் விமானம், ஏவுகணை, ட்ரோன்களை வானிலேயே சுட்டுத்தள்ளியது. இந்தியாவுக்கு சின்ன சேதாரம் கூட இல்லை. கச்சிதமாக பாகிஸ்தான் அட்டாக்கை நம் ராணுவம் முறியடித்தது. தாக்குதல் நடந்த போது பஞ்சாப், டில்லி அணிகள் மோதிய பிரிமியர் லீக் போட்டி தர்மசாலாவில் நடந்து கொண்டிருந்தது. பாதுகாப்பு காரணம் கருதி உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டது. வீரர்களும், ரசிகர்களும் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். மைதானத்தின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. பாகிஸ்தான் தாக்குதல் பற்றி விவரம் ரசிகர்களுக்கு தெரிந்தது. இருப்பினும் அவர்கள் எந்த வித பதற்றமும் இன்றி மைதானத்தில் இருந்து அமைதியாக புறப்பட்டனர். இந்தியாவில் இருக்கிறோம். சக்தி வாய்ந்த ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள் எங்களுக்கு என்ன பயம் என்று பலரும் கூறினர். இந்தியா வாழ்க; இந்திய ராணுவம் வாழ்க என்றும்; பாகிஸ்தான் ஒழிக என்றும் ரசிகர்கள் கோஷம் போட்டனர்.