உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 16,000 அடி உயரத்தில் மோனோ ரயில்: அசத்திய இந்திய ராணுவத்தின் திறமை | Indian Army Mono Rail

16,000 அடி உயரத்தில் மோனோ ரயில்: அசத்திய இந்திய ராணுவத்தின் திறமை | Indian Army Mono Rail

அருணாச்சல பிரதேசத்தில், இமயமலையை ஒட்டிய காமெங் செக்டார் மலைப்பகுதி சவாலானது. கணிக்க முடியாத வானிலையை தாண்டி அங்கே இரவு, பகலாக ராணுவ வீரர் எல்லையை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சீனாவை ஒட்டி கடல் மட்டத்தில் இருந்து, 16,000 அடி உயரத்தில் இருக்கும் இந்த போர்க்களத்தில் பொருட்களை கொண்டு செல்வது அவ்வளவு எளிதல்ல. அதிலும் பனிக்காலங்களில் மலை முழுதும் சூழும் பனி, இயற்கை பேரிடர்கள் ஆகியவை ராணுவத்துக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால், மலை அடிவாரத்தில் இருந்து உச்சியில் உள்ள வீரர்களுக்கு கடும் பனிப்பொழிவில் நடை பயணமாகவே பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அந்த வகையில் மனித ஆற்றலும், நேரமும் விரயமானது. தவிர, இயற்கை பேரிடர் காலங்களில் அடிவார முகாமில் இருந்து உச்சியில் உள்ள போர்க் களத்திற்கு எந்த பொருளையும் எடுத்துச் செல்ல முடியாத நிலை உண்டாகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இந்தியா ராணுவத்தின், கஜராஜ் கார்ப்ஸ் படைப் பிரிவு, மோனோ ரயில் போக்குவரத்தை உருவாக்கியுள்ளது. இரவு, பகல், மழை, வெயில் என மோசமான வானிலை குறுக்கிட்டாலும் இந்த ரயில் போக்குவரத்து நிற்காது. இதன் மூலம் வீரர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், ராணுவ தளவாடங்களை எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இதற்காக அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை தண்டவாளம் அமைக்கப்பட்டு, ராணுவத்துக்கான, மோனோ ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு முறையும், 300 கிலோ எடை வரை இதில் எடுத்து செல்ல முடியும். ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாத இடங்களில் விபத்துகள் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அடிவார முகாமுக்கு அழைத்து வர இது பெரிதும் உதவும். பருவநிலை மோசமாக இருக்கும் காலத்திலும், தங்குதடையின்றி பொருட்களை எடுத்து செல்லும் வகையில் மோனோ ரயில் போக்குவரத்து முறையை அட்டகாசமாக உருவாக்கி உள்ளது ராணுவம். பொதுவாக மோனோ ரயில் என்பது வழக்கமான ரயிலை போன்று இரு தண்டவாளத்தில் பயணிக்காது.

நவ 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை