உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்திய ஹாக்கி அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து Indian Hockey Team | Bronze | Olympic 2024

இந்திய ஹாக்கி அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து Indian Hockey Team | Bronze | Olympic 2024

பாரிஸ் ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் 3ம் இடத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது. நேற்றைய அரை இறுதி போட்டியில் ஜெர்மனியிடம் தோற்ற இந்திய அணி இன்று ஸ்பெயினுடன் மோதியது. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் ஸ்பெயின் கேப்டன் மார்க் மிரல்லஸ் முதல் கோல் அடித்தார். அடுத்து 30-வது நிமிடத்தில் இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத் 1 கோல் அடித்து சமன் செய்தார். 33-வது நிமிடத்தில் ஹர்மன் பிரீத் இன்னொரு கோலை அட்டகாசமாக அடித்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். அதை சமன் செய்ய ஸ்பெயின் வீரர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவின.

ஆக 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !