/ தினமலர் டிவி
/ பொது
/ இந்தியாவால் அலறும் பாகிஸ்தான்: நடந்தது என்ன? | Emergency alert sirens Pakistan
இந்தியாவால் அலறும் பாகிஸ்தான்: நடந்தது என்ன? | Emergency alert sirens Pakistan
காஷ்மீர் பஹல்காமில் நடந்த இந்துக்கள் படுகொலைக்குப் பிறகு இந்தியாவின் கோபத்தைக் கண்டு பாகிஸ்தான் ராணுவம் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. இந்தியாவின் எந்தவொரு தாக்குதலுக்கும் தனது ராணுவம் பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி ஹசீம் முனீர் கூறினார். இவர் இப்படி சொன்னாலும் பாகிஸ்தான் ராணுவம், மக்கள் மத்தியில் ஒருவித பீதி நிலவுகிறது. ஏனென்றால் பாகிஸ்தான் ராணுவத்தில் ராஜினாமாக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ராணுவ வீரர்கள், பாதுகாப்பு துறை உயரதிகாரிகள் வேலையே வேண்டாம் என ஓட்டம் பிடிக்கின்றனர். காஷ்மீர் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் பாகிஸ்தானை விட்டு வெளியேறி வெளிநாடு தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது.
மே 02, 2025