உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 175 பயணிகளுடன் சென்ற விமானம் எமர்ஜென்சி லேண்டிங் | patna delhi indigo flight | IGO5009

175 பயணிகளுடன் சென்ற விமானம் எமர்ஜென்சி லேண்டிங் | patna delhi indigo flight | IGO5009

3000 அடி உயரத்தில் அதிர்ந்த விமானம் பறவை மோதியதால் நடுவானில் ஷாக் பீஹாரின் பாட்னாவில் இருந்து டெல்லி நோக்கி இண்டிகோ விமானம் இன்று காலை புறப்பட்டது. உள்ளே 175 பயணிகள் இருந்தனர். விமானம் மேலே கிளம்பும் போதே அதன் மீது பறவை மோதி இருக்கிறது. 3000 ஆயிரம் அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் விமானத்தில் அதிர்வு உணரப்பட்டது. இதையடுத்து விமானி கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். மீண்டும் பாட்னா ஏர்போர்ட்கே திரும்பி வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவசரகால நடவடிக்கை தொடங்கப்பட்ட நிலையில் விமானம் பாட்னாவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் காலை 8:42 மணிக்கு நிகழ்ந்தது.

ஜூலை 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ