உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மர்ம தேசம் எழுத்தாளர் மறைந்தார்! | Indra Soundar Rajan | Tamil Author |

மர்ம தேசம் எழுத்தாளர் மறைந்தார்! | Indra Soundar Rajan | Tamil Author |

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார். அவருக்கு வயது 65. மதுரையில் உள்ள அவரது வீட்டில் குளியல் அறையில் வழுக்கி விழுந்து மரணம் அடைந்ததாக தெரிய வந்துள்ளது. பல்வேறு சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்களை எழுதி சிலவற்றை இயக்கி உள்ளார். இந்து மத பாரம்பரியம் மற்றும் இதிகாசங்களை எழுதுவதில் புகழ்பெற்றவர். இவர் எழுதிய என் பெயர் ரங்கநாயகி என்ற நூல் 1999ல் தமிழ் வளர்ச்சி துறையின் சிறந்த நூலுக்கான 3ம் பரிசை பெற்றது. ஆன்மிகம், சித்தர்கள் தொடர்பான இவரது கதைகள் வாசகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். என் பெயர் ரங்கநாயகி, மர்மதேசம், விடாது கருப்பு, சொர்ண ரேகை, உள்ளிட்ட புகழ்பெற்ற கதைகளை எழுதியுள்ளார்.

நவ 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை