/ தினமலர் டிவி
/ பொது
/ யூடியூபர் இர்பானை சிக்க வைத்த வீடியோ-பரபர பின்னணி | Irfan's view | Youtuber Irfan vs Biriyani Man
யூடியூபர் இர்பானை சிக்க வைத்த வீடியோ-பரபர பின்னணி | Irfan's view | Youtuber Irfan vs Biriyani Man
தமிழ் யூடியூபர்களில் பிரபலமானவர் இர்பான். ஓட்டல் ஓட்டலாக சென்று உணவு வகைகளை ருசி பார்த்து ரிவியூவ் சொல்வது இவரது வழக்கம். சமீப காலமாக இர்பானை சர்ச்சைகள் சூழ்ந்த வண்ணம் உள்ளன. அவருக்கு சொந்தமான காரை இன்னொருவர் ஓட்டி சென்ற போது விபத்து ஏற்பட்டது. அப்போது இர்பான் மீது கடும் விமர்சனம் எழுந்தது. சமீபத்தில் தனக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை துபாய் சென்று ஸ்கேன் செய்து பார்த்தார். அந்த ரிசல்ட்டை ஓபனாக யூடியூபில் சொன்னார். துபாயில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை பார்க்க அனுமதி உண்டு. ஆனால் இந்தியாவில் தடை உள்ளது.
ஆக 03, 2024