/ தினமலர் டிவி
/ பொது
/ 2000 km பறந்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்கியது எப்படி? Israel vs Houthi | Israel attack on yemen
2000 km பறந்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்கியது எப்படி? Israel vs Houthi | Israel attack on yemen
ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புலா, ஹமாசுக்கு எதிராக தீவிர போரில் ஈடுபட்டு வந்த இஸ்ரேல் சில வாரம் முன்பு ஹெஸ்புலா போரை முடித்துக் கொண்டது. இஸ்ரேல், ஹெஸ்புலா, லெபனான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. இதையடுத்து காசாவில் செயல்படும் ஹமாசை மட்டும் முழு வீச்சில் கவனிக்க ஆரம்பித்தது இஸ்ரேல். ஆனால் ஏமனில் இயங்கும் ஈரான் ஆதரவு பெற்ற இன்னொரு பயங்கரவாத அமைப்பான ஹவுதி இஸ்ரேலுக்கு தீவிரமாக குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தது. அடுத்தடுத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் இஸ்ரேலை தாக்கியது. சமீபத்தில் ஹவுதிகள் நடத்திய ட்ரோன் அட்டாக்கில் இஸ்ரேலியர் ஒருத்தர் கொல்லப்பட்டார்.
டிச 19, 2024