உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேல், ஈரான் நாடுகளின் ராணுவ பலம் ஒப்பீடு Israel vs Iran comparison military strength PM Netanyah

இஸ்ரேல், ஈரான் நாடுகளின் ராணுவ பலம் ஒப்பீடு Israel vs Iran comparison military strength PM Netanyah

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு போர் துவங்கியது. அது, கடந்த மாதம் இஸ்ரேல், ஹிஸ்புல்லா போராக மாறியது. இம்மாதம் 1ம்தேதி இஸ்ரேல் ஈரான் போராக உருவெடுத்துள்ளது. ஒரே நாளில் 180 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேலில் பெரிய பாதிப்பு இல்லை. ஆனாலும், தன் செயலுக்கு ஈரான் விலை கொடுத்தே ஆக வேண்டும் என இஸ்ரேல் எச்சரித்தது. இஸ்ரேல் அடித்தால் திருப்பி பல மடங்கு பலமாக அடிப்போம் என ஈரான் சொல்கிறது. இதனால் மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல்-, ஈரான் ராணுவ பலம் பற்றி தெரிந்து கொள்வோம். இஸ்ரேல் மக்கள் தொகை 94 லட்சம். ஈரான் மக்கள் தொகை 9 கோடியே 15 லட்சம். 94 லட்சம் மக்கள் தொகையை கொண்ட இஸ்ரேலில் ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 1.70 லட்சம். 9 கோடி மக்கள் தொகை கொண்ட ஈரானில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 6.10 லட்சம். போர் சமயத்தில் களமிறங்க இஸ்ரேலில் 4.65 லட்சம் வீரர்களும் ஈரானில் 3.5 லட்சம் வீரர்களும் ரிசர்வில் உள்ளனர்.

அக் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை