சிரியா ஆயுதங்களை டோட்டலா இஸ்ரேல் வேட்டையாடிய கதை | Bashar-al-Assad | Israel vs Syria | Syria issue
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக 13 ஆண்டுகள் முன்பு கிளர்ச்சி வெடித்தது. அதிபருக்கு எதிராக பல கிளர்ச்சி படைகள் உள் நாட்டு போரில் ஈடுபட்டு வந்தன. சிரியா நாடே துண்டு துண்டானது. ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு கிளர்ச்சி படை கைக்கு போனது. இருப்பினும் நாட்டின் பெரும் பகுதி அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசாங்கத்திடம் தான் இருந்தது. இந்த நிலையில் தான் அதிபர் வசம் இருந்த அரசை வெறும் பத்தே நாளில் எச்டிஎஸ் எனப்படும் ஹயாத் தாஹ்ரிர் அல்ஷாம் என்ற கிளர்ச்சி படை கைப்பற்றியது. நவம்பர் 27ம் தேதி சிரியா ராணுவத்துடன் தீவிர சண்டையை ஆரம்பித்த இந்த கிளர்ச்சி படை வேகமாக முக்கிய நகரங்களை கைப்பற்ற ஆரம்பித்தது. பத்தே நாட்களில் தலைநகர் டமாஸ்கசையும் கைப்பற்றி அரசை பிடித்தது. கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கசை நெருங்கியதும் உயிருக்கு பயந்து குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடினார் அதிபர் பஷா் அல் ஆசாத். மனிதாபிமான அடிப்படையில் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் ரஷ்யா அடைக்கலம் கொடுத்தது. அவர்களை சிரியாவில் இருந்து பத்திரமாக மீட்டு மாஸ்கோவில் ரகசிய இடத்தில் தங்க வைத்திருக்கிறது. முன்னதாக அதிபர் பதவியை ராஜினாமா செய்த பஷர் அல் ஆசாத், கிளர்ச்சியாளர்களிடம் ஆட்சியை ஒப்படைக்கும் படி கூறி விட்டு சென்றார். இப்போது சிரிய அரசாங்கம் முற்றிலும் கிளர்ச்சி படை கைக்கு வந்து விட்டது.