/ தினமலர் டிவி
/ பொது
/ இஸ்ரேல் டைம் மெஷின்னு சொல்லி அரங்கேறிய சம்பவம் | Time Machine Scam | UP Couple Time Machine
இஸ்ரேல் டைம் மெஷின்னு சொல்லி அரங்கேறிய சம்பவம் | Time Machine Scam | UP Couple Time Machine
ஆன்லைன் மோசடி, MLM மோசடி, இன்னும் பல வகையான பண மோசடிகள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இதுவரை யாரும் நினைத்து பார்க்காத ஒரு மோசடி உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. கான்பூர் கித்வாய் நகரில் ராஜீவ் குமார், அவரது மனைவி ரஷ்மி இருவரும் சேர்ந்து தெரபி மையம் திறந்துள்ளனர். வழக்கமான மசாஜ் தெரபி மாதிரி இல்லாமல் இது வேற லெவலில் இருக்கும் என விளம்பரப்படுத்தினர். இஸ்ரேலில் இருந்து டைம் மெஷினை இறக்குமதி செய்துள்ளோம். இதில் ஆக்சிஜனை நிரப்பி தெரபி செய்தால் 60 வயது முதியவர் கூட 20 வயது இளைஞராக தெரிவார் என கூறினர்.
அக் 04, 2024