ஹமாஸ் உச்ச தலைவர் உயிருடன் வந்தது எப்படி? இஸ்ரேல் ஷாக் | Israel vs Hamas | Yahya Sinwar
ஒரு பக்கம் இஸ்ரேல்-ஹமாஸ் போர், மறுபக்கம் இஸ்ரேல்-ஹெஸ்புலா சண்டை என மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதட்டம் நிலவி வருகிறது. ஹமாஸ், ஹெஸ்புலா என இரண்டு பயங்கரவாத அமைப்புகளையும் இஸ்ரேல் துரத்தி துரத்தி அடிக்கிறது. முக்கிய தலைவர்களை தேடி தேடி குண்டு வீசி கொல்கிறது. சமீபத்தில் தான் ஹெஸ்புலாவின் உச்ச தலைவர் நஸ்ரல்லாவை போட்டுத்தள்ளியது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பதுங்கி இருந்த அவரை குண்டு வீசி கொன்றது இஸ்ரேல். அதற்கு சில வாரங்கள் முன்பு தான் ஹமாசின் உச்ச தலைவர் இப்ராகிம் ஹனியேவை இஸ்ரேல் கொலை செய்தது. ஈரான் அதிபர் பதவி ஏற்பு விழாவுக்காக ஹனியே சென்றிருந்தார். ஈரானின் டெஹ்ரான் நகரில் தங்கி இருந்தபோது, அவரை குறி வைத்து இஸ்ரேல் குண்டு வீசியது. இந்த துல்லிய தாக்குதலில் ஹனியே கொலை செய்யப்பட்டார்.